75ஆவது சுதந்திர தினத்தையொட்டி  கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்

Must read

சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்டு 15ந்தேதி வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,  சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதையொட்டி, கடற்கரை மெரினா உழைப்பாளர் சில முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை  கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கொத்தளம் எதிரே அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.  காலாட்படை , கமாண்டோ படை, பெண்கள் படை உட்பட காவல்துறையின் ஏழு படைகளின் அணிவகுப்பு மற்றும் உதிரி படைகளின் அணிவகுப்பு ஒத்திகை மற்றும் காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாள் ஒத்திகை இன்று காலை நடைபெற்றது . ஆகஸ்ட் 9ம் தேதியும்,  இறுதி ஒத்திகை ஆகஸ்ட் 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதையொட்டி, கடற்கரை மெரினா உழைப்பாளர் சில முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article