வாக்காளர்களுக்காக 750 சிறப்பு பேருந்துகள்: இன்று இயங்குமா

Must read

800x480_IMAGE45969274
சென்னையில் வசிக்கும், வெளி மாவட்ட மக்கள் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக 750 சிறப்பு பேருந்துகளை நேற்று முன்தினமும் நேற்றும்  இயக்கியதாக  தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் வெளிமாவட்ட மக்கள் லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஓட்டு, சொந்த ஊரில் இருக்கிறது.
இவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக, 750  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று  தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில்,  ‘எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், கோயம்பேட்டில் இருந்து  எப்போதும்போல  2,300 பஸ்கள் இயக்கப்படும்.  நேற்று முன்தினமும், நேற்றும்  கூடுதலாக, 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன’ என்றனர்.
இன்று இரவு, (15.05.16) தென் மாவட்டங்களில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு முடிந்துவிட்டது.  ஓட்டுனர், நடத்துனர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட செல்ல இருப்பதால், இன்று இரவு , தொலைதுார பஸ்களை இயக்குபவர்கள் பலர் பணிக்கு வருவது சந்தேகமே.
இதனால்,  இன்று இரவு பஸ்களை இயக்குவதில் சிக்கல்  இருக்கிறது.  “இருப்பினும் சமாளிப்போம்’ என, போக்குவரத்து கழக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

More articles

Latest article