சென்னை: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதுபோல தேர்தல் ஆணையத்தின் சுவிதா செயலி மூலம் தாக்கல் செய்யப்பட்ட 724 விண்ணப்பங்களும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செயலி மூலம் நேற்று காலை 11 மணி நிலவரப்படி, 1,157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 724 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 219 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
214 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. சென்னை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள் நடத்த 112 இடங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்த 179 இடங்கள் என மொத்தம் 291 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த 291 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]