ட்ரம்பை பணிய வைத்த ட்விட்டர்…!

Must read

Twitter is suing the government for trying to unmask an anti-Trump account

________________________________________________________________________________________

அமெரிக்காவின் பல்வேறு கொள்கைகளில் அதிரடியாக மாற்றம் செய்து வரும் அதிபர் ட்ரம்பிற்கு, ட்விட்டர் நிறுவனம் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருக்கிறது. ட்ரம்பை விமர்சித்த ட்விட்டர் கணக்குதாரரின் விவரங்களை அளிக்க அமெரிக்க அரசு உத்தரவிட்ட நிலையிலும், அந்நிறுவனம் அவற்றைத் தர மறுத்து விட்டது

@ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கில், அதிபர் டிரம்பின் குடியேற்ற கொள்ளைகளை கடுமையாக விமர்சித்து பதிவிடப்பட்டிருந்தது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவையில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த கணக்கு நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, அந்த ட்விட்டரில் முகவரியில் இயங்குபவர்களின் அடையாள தகவலை அளிக்குமாறு அமெரிக்க  அரசு உத்தரவிட்டது.

 

ஆனால், ட்விட்டர் நிறுவனம் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது . இதையடுத்து, ட்விட்டர் கணக்குதாரரின் விவரங்களை அளிக்குமாறு பிறப்பித்த உத்தரவை அமெரிக்க அரசு திரும்பப்பெற்று விட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, ட்விட்டர் நிறுவனம் பதிந்த ஒற்றை நாள் ஆயுட்காலம் கொண்ட வழக்கை தொடர்ந்து @ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 38,000 லிருந்து 1,58,000 ஆக எகிறியுள்ளது.

 

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் ட்விட்டருக்கு வழங்கிய ஆணையின்படி, ”@ALT_USCIS என்ற ட்விட்டர் கணக்கின் பயன்பாட்டாளர் பெயர், கணக்கை இயக்கும் ஐ.டி, தொலைபேசி எண்கள், மெயில் முகவரிகள் மற்றும் கணினியின் ஐ.பி முகவரி உள்பட அனைத்துத் தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

______________________________________________________________________________________.

 

More articles

Latest article