தேனி,

தேனி மாவட்டம் முருகமலை வனப்பகுதியில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள் 6 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2007-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் முருகமலையில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாக நக்சலைட்டுகள் சுந்தரமூர்த்தி, வேல்முருகன், முத்துச்செல்வம், பழனிவேல், பாலகிருஷ்ணன், கார்த்திக், ஈஸ்வரன், ரஞ்சித், விவேக் ஆகிய 8 பேரை கடந்த 2007ம் ஆண்டு கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஜாமீனில் வெளிவந்த வேல்முருகன், கார்த்திக் ஆகியோர் தலைமறைவாயினர்..

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மற்ற 6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த பெரியகுளம் சார்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளுக்கு 3 மாதம் முதல் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.