ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்   இலங்கையில் இருந்து 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர்.  ஏற்கனவே பல இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தை நோக்கி தமிழ்நாடு வந்தடைந்துள்ள நிலையில், இன்று மீண்டும் ஒரு குடும்பத்தில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.


கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளதால், அங்கு வரலாறு காணாத அளவுக்கு விலைவாசிகள் உயர்ந்துள்ளன. இனால்,  அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா உள்பட பல நாடுகள் செய்து வருகின்றன. தற்போது,    பொருளாதார நெருக்கடி ஓரளவிற்கு  இலங்கையில் சீரான நிலையில் இருந்தாலும், இன்னமும் விலைவாசி உயர்வுகள் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களது வாழ்வதாரத்தை இழந்துள்ளதால், வாழ்வைத் தேடி  அகதிகளாக தமிழகம் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கை மன்னாரில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தடைந்தனர். அவர்களை கண்ட கடற்படை அதிகாரிகள், அவர்களை அழைத்துச் சென்று மண்டபம் முகாமில் உள்ள காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர். விசாரணைக்கு பின் 7 பேரும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். ஏற்கனவே அகதிகளாக வந்தவர்களும் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் இந்த 7 பெரும் தங்க வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.