துருக்கியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை 180ஐ கடந்துள்ள தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 26 கி.மீ. கிழக்கே 17 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது து. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. துருக்கியின் காஜியண்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு, “கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியது. சில இடங்களில் கட்டிங்கள் இடிந்து விழுகந்தன. அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
மலாத்யா, தியார்பாகிர் மாகாணங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள பல்வேறு அடிக்குடி கட்டிடங்கள் இடிந்து நாசமாகி உள்ளதால் பலர் அதில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் கட்டி இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு அஜர்பைஜான் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.