சென்னை: தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வுகள் டிசம்பர் 15ந்தேதி தொடங்கி 23ந்தேதி முடிவடைகிறது.

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 3ம் வாரத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள உத்தரவில், 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிச.15 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6,8,10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முற்பகலிலும், 7,9,11ம் வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.  6-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பெற்றுக்கொள்ள அறிவிறுத்தப்பட்டுள்ளது.