ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் உள்பட 2 பதக்கம் பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளார்.

திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகிய இந்திய மூவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் போட்டியில் முதலிடத்தை முடித்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடப்பாண்டு  சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீனாவின்  ஹாங்சோவ் நகரில்  செப்டம்பர் 24ந்தேதி முதல்  இப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நாளான நேற்று நடைபெற்ற , துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் 2 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதேபோல், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி அணிவெள்ளி வென்றது . துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணி 2 வெண்கலம் வென்றது.

10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் போட்டியில்  இந்திய வீரர்கள், திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகிய இந்திய மூவரும் முதலிடத்தை முடித்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தனர். இது புதிய சாதனையும் கருதப்படுகிறது.

அதுபோல துடுப்புப் படகு போட்டியில் 2 வெண்கலமும்,  துடுப்பு படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது, துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் தோமர் ஒரு வெண்கலமும், 25 மீட்டர் பயர் பிஸ்டல் இந்திய ஆண்கள் அணி ஒரு வெண்கலம் என 2 வெண்கலம் வென்றது.

இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 6வது இடம் பிடித்துள்ளது.