தமிழகத்தில் 69% நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன! தமிழகஅரசு தகவல்…

Must read

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த நீர்நிலைகளில் 69% நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கப்படாத நிலையில், நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், வடகிழக்கு பருவமழையின்போது பெய்யும் மழை காரணமாக வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வும், அம்மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தமிழகத்திற்கு வந்துள்ளதான காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள  நீர்தேக்கங்களில், 69.32 விழுக்காடு நீர்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக  தெரிவித்துள்ளது.

மாநில தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்தேக்கங்களான பூண்டி 87.28 சதவீதம், சோழவரம் 71.32 சதவீதமும், செங்குன்றம் 83.58 சதவீதமும், செம்பரம்பாக்கம் 76.16 சதவீதமும், தேர்வாய் கண்டிகை 92.80 சதவீதமும் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தனா, குண்டாறு, அடவிநயினார் கோயில், சோத்துப்பாறை, வர்மதாநதி, சோலையாறு ஆகிய நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article