இந்திய நீதிமன்றங்கள் ஊரடங்கின் போது உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத கடைசியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கபிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதி மன்றங்களும் இழுத்து மூடப்பட்டன.

ஆனால் நீதிமன்ற செயல்பாடுகள் முடங்க வில்லை.

இந்தியாவின் பிரமிக்க தக்க தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு காரணம்.

காணொலி காட்சிகள் மூலம் உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் எந்த தொய்வும் இல்லாமல் விசாரணை நடந்தது.

இதனால் நீதிமன்றங்கள் மூடப்பட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை 67 லட்சம் வழக்குகளின் விசாரணை காணொலி காட்சி மூலம் நடந்துள்ளது.

உச்சநீதிமன்றம் 52 ஆயிரத்து 353 வழக்குகளை விசாரித்துள்ளது.

நீதிமன்றங்களுக்கு இண்டெர்நெட் வசதி அளித்து மேம்படுத்தியதால், இந்த சாதனை சாத்தியமாயிற்று.

– பா. பாரதி