டெல்லி: 66குழந்தைகளுக்கான காரணமாக மருந்துகளை தயாரித்த, அரியானாவின் மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவது இல்லை என அனைத்து இந்திய வம்சாவளி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடாக காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவின் அரியான மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான சிரப்-கள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியதுடன், அந்நிறுவனத்தின் 4 மருந்துகளை தவிர்க்கும்படி உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், Maiden Pharmaceuticals Limited தயாரிக்கும் மருந்துகள் இந்தியாவில் விநியோகம் செய்யவோ, விற்பனை செய்யவோ அனுமதி இல்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதாக தெரிவித்துள்ள அனைத்து இந்திய வம்சாவளி வேதியியலாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் ஏதேனும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டால், அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம் என தெரிவித்து உள்ளது.
66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?