டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் காவல்துறையினரால் 655 என்கவுன்டர்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 14 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதும்  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்றுள்ள என்கவுன்டர் குறித்து உறுப்பினர் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,

ஜனவரி 1, 2017 முதல் ஜனவரி 31, 2022 வரை காவல்துறையினரால் 655 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சத்திஸ்கர் மாநிலத்தில் 191 என்கவுன் டர்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதையடுத்து   உத்தரபிரதேசத்தில் 117, அசாமில் 50, ஜார்கண்டில் 49, ஒடிசாவில் 36 மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 35, மகாராஷ்டிராவில் 26, பீகாரில் 22, ஹரியானாவில் 15, தமிழகத்தில், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தலா 14 , ஆந்திரா மற்றும் மேகாலயாவில் தலா 9 மற்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் தலா 9 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.