திருப்பூர்.

நொய்யல் ஆற்றில் சாயப்பட்டரை காரணமாகவும், சாக்கடை கலப்பதாலும் உருவான குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கட்ந்த ஒரு வாரத்தில் மட்டும் 640 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் நகராட்சியும், தனியார் தொழில்நுட்ப குழுவினரும் இணைந்து ஆற்றி சுத்தப்படுத்தி, அதனுள் இருந்த குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை கடந்து, கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றில் அந்த பகுதியில் செயல்படும் தொழிற்சாலை சாயக்கழிவுகள் மற்றும் சாக்கடை கலந்து மிகக்கடுமையாக மாசடைந்துள்ளது. இதன் காரணமாக நுரை பொங்கி ஊரெங்கும் பரவியது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் கருப்பண்ணனின்  கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது என்று அதிரடி கருத்தை கூறி பரபரப்பை கூட்டியிருந்தார்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி  நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் தொழில்துறையினர் இறங்கியுள்ளனர்.

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் போன்ற கழிவு பொருட்கள் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தன.

இதன் காரணமாக நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம், தொழில்துறையினர் உதவியுடன் முயற்சி மேற்கொண்டது.

இதுகுறித்து அந்த பகுதியில் செயல்பட்டு வந்த, ஜீவநதி நொய்யல் சீரமைப்பு குழுவினருடன்  கலெக்டர்  ஆலோசனை நடத்தினார். அதையடுத்து வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய தீர்மானிகக்பபட்டது.

அதன்படி தொழில் அமைப்பினர் மற்றும் மாநகராட்சி இணைந்து, நொய்யல் தூய்மை பணியை, கடந்த, 4ந்தேதி தொடங்கியது.  மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு திட்டத்தை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து நொய்யல் ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதற்காக இதுவரை ரூ.50 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 640 டன் குப்பைகள் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் ஜீவநதி நொய்யல் சீரமைப்பு குழு செயலாளர் சண்முகராஜ் கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம், மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான வரும் 15ந்தேதி மரக்கன்றுகளை நட இருக்கிறோம். மேலும் ஆற்றின் கரையோரம் முள்வேளி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

பொதுமக்களின் குடிநீருக்கு பெரிதும் ஆதாரமாக விளங்கி வரும் நொய்யல் ஆறு வரலாற்று சிறப்புமிக்கது.