டில்லி

த்துவா பலாத்காரம் உள்ளிட்ட பல விவகாரங்களில் மோடி மௌனமாக இருப்பதற்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.   கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது,  உன்னாவ்  பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தது,  சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் உள்ளிட்ட எதற்கும் மோடி கருத்து சொல்லாமல் மௌனம் சாதிப்பதாக பலரும் புகார்கள் கூரி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் மௌனத்தை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 49 பேர் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தது தெரிந்ததெ. தற்போது நாட்டின் முன்னனி கல்வியாளர்கல் சுமார் 637 பேர் இணைந்து மோடிக்கு தங்கள் கண்டனத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.   அந்த கடிதத்தில், “நாட்டில் சிறுபான்மையினர், தலித் மர்றும் பழங்குடியினர்.  பெண்கள், குழந்தைகள்  ஆகியோருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.   ஆனால் இது குறித்து நீங்கள் எத ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நாங்கள் கடும் கோபம் மற்றும் வேதனை அடைந்துள்ளோம்.  அதை வெளிப்படுத்தவே இந்தக் கடிதத்தை எழுதி உள்ளோம்.   காஷ்மீரில் ஒரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது,  உத்திர பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தது போன்ற சம்பவங்களுல் நீங்கள் மௌனம் காத்து வருகிறீர்கள்.   இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என உறுதி அளிக்கவும் முன் வரவில்லை.   இது கண்டனத்துக்குரியது”  எனத் தெரிவித்துள்ளனர்.