(பைல் படம்)மயிலாப்பூர் கற்பாகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோயிலில் இன்று அறுபத்து மூவர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
மயிலை கபாலீசுவரர் கோவிலின் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் நேற்று மாட வீதிகளில் அசைந்தாடி பவனி வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் 63 திருவிழா நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா பங்குனி பெருவிழா கடந்த 21ந்தேதி கிராம தேவதை பூஜையுடன் தொடங்கி 22ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று 7வது நாள் திருவிழாவையொட்டி திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று 8வது நாள் அறுபத்து மூவர் திருவிழா நடைபெறுகிறது.
இன்று மாலை 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் எழுந்தருளி, 63 நாயன்மார்களுடன் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வர்த்தகர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மயிலை திருவிழாவையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய விழாவுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் மயிலையில் குவிவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உளளது.