சென்னை:
மிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக  616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்படசில மாவட்டங்களில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தில் ஏறி வருகிறது.   இன்று புதிதாய் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்தது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை 616 , செங்கல்பட்டு 94, கடலூர் 5, கள்ளக்குறிச்சி 2, காஞ்சிபுரம் 22,  கன்னியாகுமரி 4, கரூர் 1, கிருஷ்ணகிரி 1,  மதுரை 10, நாகப்பட்டினம் 3, பெரம்பலுர் 1, ராமநாதபுரம் 1, சிவகங்கை 1, தென்காசி 1, தஞ்சாவூர் 2, தேனி 1, திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 28,  திருவண்ணாமலை 9, திருவாரூர் 4, தூத்துக்குடி 15, திருநெல்வேலி 3, திருச்சி 5, விழுப்புரம் 2, விருதுநகர் 1,