சென்னை:

மிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ்அதிகாரிகளை தமிழகஅரசு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், உளுந்தூர்பேட்டை பட்டாலியன் காமண்டென்ட் மனோகர், சென்னை கீழ்பாக்கம் காவல் துணை ஆணையராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன், பூக்கடை காவல் துணை ஆணையராக ராஜேந்திரனும், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக அரவிந்தனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி பொன்னி, சென்னை மத்திய கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார், சென்னை காவல்துறையினர் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிருந்த ஜெயலட்சுமி, மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக டாக்டர்.கே.பிரபாகரும், அண்ணா நகர் காவல் துணை ஆணையராக முத்துசாமியும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக டாக்டர் சுதாகரும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் எஸ்.பி.யாக பாண்டியராஜனும், திருநெல்வேலி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக சரவணனும், சென்னை உளவுத்துறை எஸ்.பியாக சரவணனும், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக கண்ணனும், அடையார் துணை ஆணையராக பகலவனும், நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக கலைச்செல்வனும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு புதிய சட்ட ஒழுங்கு டி.ஜி.பி அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையில், 61 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் உள்ள துணை ஆணையர்கள் பலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்