நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை வீழ்த்தி இந்திய வரலாற்றில் ஒரு மாநில கட்சி 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அரியணையில் ஏறியது.

திமுக வென்று அண்ணா முதலமைச்சராக பதவியேற்றார். இதற்கு அவர் மட்டும் முழுக்காரணம் அல்ல.. இதை அவரே ஒப்புக்கொண்டிக்கிறார்..

ஈவிகே.சம்பத் நெடுஞ்செழியன், என்.விஎன் நடராஜன் மதியழன் என் முதல் செட்டும் அடுத்து. அசத்தலான எழுத்து மக்களை ஈர்த்த நடிப்பு என கருணாநிதி, கே.ஆர்.ராமசாமி, டிவி.நாராயணசாமி, எஸ்எஸ்ஆர், சிவாஜி, எம்ஜிஆர் என இரண்டாவது செட்டும் முழுப்பலத்தையும் உதயசூரியனுக்கும் கருப்பு சிவப்பு கொடிக்கும் திரட்டித்தந்தன..

1949 ல் தொடங்கிய இயக்கம், 1967ல் ஆட்சியை பிடித்தபோது, இவ்வளவு சீக்கிரமாவா கிடைக்கும் என அண்ணாவுக்கே நம்பமுடியவில்லை..

தேர்தல் நேரத்தில் எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவ மனையில் இருந்த காட்சிப்படங்கள் திராவிட இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவைக்க திடீர் துருப்பு சீட்டாக கிடைத்தது தமிழக அரசியலில் மறக்கமுடியாத பக்கம்..

அண்ணாவில் தொடங்கி இன்று எடப்பாடி பழனிச்சாமி வரை வந்து நிற்கிறது, இருந்தாலும் அண்ணா, எம்ஜிஆர்,,கருணாநிதி, ஜெயலலிதா என்ற நான்கு பிம்பங்கள் மட்டுதே மக்களிடம் செல்வாக்கு பெற்றவை..

1971 முதல் 1987ல் எம்ஜிஆர் காலமாகும்வரை தொடர்ந்து அமைச்சராகவே இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செல்லாக்காசாகியிருப்பதும், சசிகலா, தினகரன் போன்றவர்கள் அதிமுகவில் கோலேச்சுவதும் கிறுகிறு பக்கங்கள்

தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும் மூன்றவாது ஆள் உருவெடுத்து விடக்கூடாது என்பதில் கருணாநிதியும் எம்ஜிஆரும் வகுத்தெடுத்த பாதை வெற்றிகரமாகவே அமைந்ததுதான் திராவிட கட்சிகளை இதுவரை காப்பாற்ற வந்துள்ளன.

அண்ணா, உலகப்புகழோடு சேர்ந்தார்..கருணாநிதி எந்த நிலையிலும், அரசியலின் மையப்புள்ளியாகவே திகழ்ந்தார். எம்ஜிஆர், இன்றும் மக்கள் மனதில் அதே பொலிவோடு வாழ்கிறார்.. ஜெயலலிதா, மக்கள் அபிமானம் பெற்றிருந்தாலும் சட்டத்தால் சாய்க்கப்பட்டு மோசமான சரித்திரம் படைத்துவிட்டார்.