நெட்டிசன்:

மூத்த செய்தியாளர் சரவணன் சந்திரன் (Saravanan Chandran ) அவர்களின் முகநூல் பதிவு:

அடிக்க வர மாட்டீர்கள் என உத்தரவாதம் கொடுத்தால் அடுத்தது மேற்கொண்டு செல்லலாம் என்று திட்டம். சுச்சி லீக்ஸ் வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காமலும் இருந்திருக்கலாம். பார்ப்பதோ பார்க்காமல் இருப்பதோ ஒவ்வொ ருத்தரின் தனிப்பட்ட கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதற்குள் போக வேண்டாம். ஆனால் என்னுடைய இன்னொரு வட்டத் தோழர்கள், தோழிகள் மத்தியில் கடந்த இரண்டு நாட்களாக இதுதான் ஹாட் டாக்.

அடுத்தது எப்ப என்று கேட்டுச் சொல்ல முடியுமா என்று என்னிடம் கேட்ட தோழி, மிகப் பெரிய அலுவலகம் ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். தனுஷி டம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னதும் அவர் அதையும் நம்பிக் கொண்டு காத்திருக்கிறார்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் சர்ச்சை வந்த போது, இந்த ‘பார்ட்டி பாய்ஸ்’ பற்றியும் அதில் அவர்கள் செயல்படும் விதங்கள் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை ஓரளவு அரசல்புரசலாக அதில் தெரிவிக்கவும் செய்திருந்தேன்.

அது ஒருபக்கம் இருக்கட்டும். நண்பர் ஒருத்தர் சொன்ன கதை இது. கண்ணால் பார்க்கவில்லை என்பதால் கதையென்றே சொல்கிறேன். விரைவில் கண்ணால் பார்த்துவிடலாம் என்கிற திட்டமும் வைத்திருக்கிறேன் அது உண்மையாக இருக்கும்பட்சத்தில்.

கிழக்குக் கடற்கரை சாலை பக்கமெல்லாம் சில இடங்களில் பார்ட்டியொன்று நடக்கிறது. வழக்கம் போல ஜோடியாகத்தானே போவோம்? ஒரு பெரிய கண்ணாடிக் குடுவைக்குள் அத்தனை பேருடைய கார் சாவியையும் தூக்கி உள்ளே போடுவார்கள். கையை விட்டு தட்டுப்படும் சாவியொன்றை எடுக்க வேண்டும். எந்தக் காருடைய சாவி கிடைக்கிறதோ, அந்தக் காரில் வந்த எதிர் பாலினத்தோடு அந்த இரவைக் கழிக்கலாம். திகிலான விளையாட்டு போலவே இந்த ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது உண்மையா என்று தெரியவில்லை என்பதையும் மறுபடி சொல்லி விடு கிறேன். ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுச்சி லீக்ஸ் வீடியோக்களில் வந்திருக்கிற இளைஞ இளைஞகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சினிமா துறைக்குள் மட்டும் இதுபோல நடப்ப தில்லை. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று இளைஞர் கூட்டம் இன்று பெரு நகர்ப்புறங்களில் கிளம்பி விட்டது.

நட்புக்களுக்கு மத்தியில் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வதைப் போல, பரிசு களைப் பரிமாறிக் கொள்வதைப் போல உடல் ரீதியிலான தொடர்புகளையும் மேற்கொள்வதில் என்ன தப்பு என எதிர்க் கேள்வி கேட்கும் புதிய தலைமுறை வர்க்கம் உருவாகி வருகிறது.

பாலியலை அதன் போக்கில் கொண்டாட்டமாக முன்னிறுத்தும் தலைமுறையாக அது தன்னை வடிவமைத்துக் கொண்டு வருகிறது. எதையும் தவறென்று சொல்லி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நான் கொடி பிடிக்க விரும்பவில்லை.

அதில் ஒரு பையன் என்னிடம் கேட்ட கேள்வியை அப்படியே ரோலக்ஸ் வாட்ச் நாவலில் எழுதியிருப்பேன். “ஒரு அக்காவோட தங்கச்சிய லவ் பண்றோம். அண்ணனோட தங்கையை லவ் பண்றோம். ஏன் ஒரு புருஷனோட பொண்டாட் டிய லவ் பண்ணக்கூடாது”. கொதித்துப் போய்விடாதீர்கள். இப்படித்தான் இயங்குகிறது அவ்வுலகம்.

இன்னாது அம்ம இவ்வுலகம் என சங்கச் சித்திரங்களை வரையத்தான் எனக்கும் ஆசையாக இருக்கிறது. ஆனால் நிதர்சனம் வேறு மாதிரியாக இருந்தால் என்ன செய்வது?

இதுதான் அவர்களது உலகம். அவர்கள் நிறையச் சம்பாதிக்கிறார்கள். எல்லா வகையான போதைகளும் அவர்களது கைக்கு எட்டும் தொலைவிலேயே இருக்கி றது. அவர்கள் தங்களது துறைகளுக்குள் ஒரு குழுவாக இருந்து இயங்கு கிறார்கள். அங்கே கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். கட்டிப் புரண்டும் கொள்கி றார்கள். அடித்து சட்டையைக் கிழித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். அங்கே அவர்களால் புழங்கப்படும் வாழ்க்கை, நாம் வைத்திருக்கிற ஒழுக்க அளவுகோல் களுக்கு அப்பாற்பட்டது.

அப்படீன்னா என்ன என்று எதிர்க்கேள்வி கேட்பவர்களி டம் போய் ராமாயணம் பாராயணம் என்று பேசிக் கொண்டிருந்தால், உள்ளே அழைத்துப் போகவே மாட்டார்கள். அடுத்த டிரிங்கிற்கு காசு கொடுக்கவும் மாட்டார்கள். அது வேறு ஒரு உலகம்.

வாழ்க்கையை அவர்களது புரிதலுக்குட்பட்டு வேறு வகையான கொண்டாட்டங்க ளோடு நகர்த்தும் உலகம். உண்மையில் ஹிப்பியிசத்திற்கான கூறுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மெதுவாக இப்படி ஒரு லேயர் நமது சமூகத்தில் உருவாகி வருகிறது. அது ஒரு முழுப் பூசணிக்காய். அதைச் சோற்றில் மறைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவருடைய நண்பரோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் என்ன தப்பு எனக் கேட்ட கணவரோடு சண்டை போட்டு புகார் அளிக்க வந்த பெண்ணொருவர் இதைப் பற்றியெல்லாம் ஒருமுறை கதை கதையாய்ச் சொல்லி யிருக்கிறார். அடுத்த தலைமுறையின் உலகம் இதுமாதிரித்தான் இருக்கிறது. அது நல்லதா கெட்டதா என்கிற கேள்விகளெல்லாம் தனிமனிதர்களைப் பொறுத்த விஷயம். அந்த ஸ்கேலை நான் எடுத்து அளக்கத் தயாராகவேயில்லை.

இப்போது சுச்சீ விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொள்ள வேண்டுகிறேன். கட்டி உருண்டார்கள் ஒருகாலத்தில். அப்போது போதை யில் படுத்துக் கிடக்கும் போது மொபைலில் இருந்த அத்தனை படங்களும் கைப்பற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அவ்வளவுதான். நமக்குத்தான் பதற்றங்கள் எல்லாம். அந்தப் பக்கம் போய் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள்.

“மச்சி அந்த வீடியோவில நீ வச்ச ஷாட் தப்பு. அப்படியே டில்ட் அப், டில்ட் டவுண் வச்சுருந்தேன்னு வச்சுக்கோ….” இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அது தான் அந்த தலைமுறையின் இயல்பும்கூட. வயதான நாம்தான் எதற்கெடுத்தா லும் பதறுகிறோம்.

ரெம்ப பதற்றம் வந்தால் உடனடியாக ஒரு மெட் எக்ஸ் எல் 25 எம்ஜி போட்டுக் கொள்ளுங்கள். அதுதான் நம்மால் முடிந்தது. அப்நார்மல் ஆன தருணங்களில் நானும் அந்த மாத்திரையைத்தான் எடுத்துக் கொள்வேன்.