பம்பா: 60 நாட்கள் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலையுடன் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டது.
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மரக விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. 60 நாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜைகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு அய்யப்பனின் ஆசி பெற்று சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்து சென்றனர்.
இந்த நிலையில், இன்றுடன் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மற்றும் தரிசனம் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை விசேஷ பூஜைகளுடன், கோவில் நடை மூடப்பட்டது.