சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. மாலை 6மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 147 இடங்களிலும், அதிமுக கூட்டணி 86 இடங்களிலும், மநீக ஒருல தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகள் திமுக மட்டும் 123 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் 4 இடங்களிலும், விசிக 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில், அதிமுக மட்டும் 77 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான பாஜக 3 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 86தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
மக்கள் நிதி மய்யம் கட்சியில், அதன் தலைவர் கமல்ஹாசன் மட்டும் முன்னிலையில் உள்ளார்.