சென்னை:

மிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்து உள்ளார்.

டில்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அங்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்வர்தனை சந்தித்து பேசினார். அப்போது தமிழகதின் தேவை குறித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து மத்திய குடும்பநலத்துறை செயலாளர்  பிரித்தி கடான்-ஐயும் சந்தித்து மனு அளித்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரி இருப்பதாகவும்,  புதிதாக சுகாதார மையங்கள் அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.