நெல்லை: சட்டவிரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்தபோது, அதை தடுக்க அரசு மற்றும் அதிகாரிகள், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளி விற்பனை செய்து கோடிக்கணக்கில் கல்லா கட்டிய விவி மினரல்ஸ் உள்பட 6 நிறுவனங்கள், அரசுக்கு ரூ.3,528 கோடி ராயல்டியாக செலுத்த வேண்டும் என நெல்லை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை உள்பட பல பகுதிகளில் தாதுமணல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பல்வேறு நிறுவனங்கள் முறைகேடாக அள்ளி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்ட பிறகே, இந்த விஷயத்தில் நீதித்துறையின் அறிவுறுத்திலின் பேரில் காவல்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது.
இதையடத்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தாதுமணல் ஆலைகள் மூடப்பட்டன. இந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சு ஆகிய மாவட்டங்களில் தாது மணலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய கனிம வளத்துறை செயலாளர் ககந்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுக்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சு ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன. இதனை அடுத்து முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 2015-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி வரை ஆய்வு நடந்தபிறகு அதன் அறிக்கை சமர்பிக்கப்பட்ட்டது. இதுதொடர்பான வழக்கும்நிலுவையில் உள்ளது.
இந்த த சூழலில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சமீபத்தில், நெல்லை மாவட்டத்தில் 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது நோட்டீசில், சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த கார்னெட், இல்மனைட், வி.வி. மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி உரிமைத் தொகை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதில், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 27 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாகவும், அதற்கான ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளாக இதன்மீதான நடவடிக்கைகளை கிடப்பில் போடப்பட்ட நிலையில், திடீரென தற்போது மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளத.
தாது மணல் எடுப்பது 2013-ம் ஆண்டு முதல் தடை செய்யபட்டுள்ள நிலையில் சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தடையை மீறி 2013-க்கு பிறகு தாது மணல் எடுத்தது தொடர்பாக தனி நோட்டீஸ் வழங்கப்பட இருப்பதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் நோட்டீஸ் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடதக்கது.
[youtube-feed feed=1]