ஆர் கே நகரில் 59 பேர் போட்டி

சென்னை

ர் கே நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி இடுகின்றனர்

ஆர் கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல பரபரப்புகள் அரங்கேறி உள்ளன.   எந்தத் தேர்தலிலும் இந்த அளவுக்கு சர்ச்சைகள் ஏற்பட்டதில்லை என்னும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சர்ச்சை.  இறுதியாக விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பெரும் விவாதம் ஆகியது.  இன்று வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இதைத் தொடர்ந்து தற்போது வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் அளிக்கப்பட்ட்ட வேட்புமனுக்களில் விஷால், ஜே. தீபா உட்பட 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள 72 மனுக்களில்  13 பேர் இன்று வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர்.  தற்போது ஆர் கே நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி இடுகின்றனர்.

இறுதிப்பட்டியலில் மதுசூதனன் (அதிமுக), மருது கணேஷ்(திமுக), கரு நாகராஜன்(பாஜக),  கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.  இந்த தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் உபயோகப்படுத்தப்படும் எனவும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் பயன்படுத்த உள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
English Summary
59 candidates in RK Nagar by election