தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 28, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
சென்னை செங்கை காஞ்சிபுரம் திருவள்ளூர் தவிர கோவை, கன்னியாகுமாரி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தவிர, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மொத்தம் 16,559 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 25 ஆண்கள் 33 பெண்கள் என மொத்தம் 58 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
59 பேர் இன்று குணமடைந்த நிலையில் 466 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.