பெங்களூரு

ர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.  தோல்விக்கு எடியூரப்பா, ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது, மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்டோர் பா.ஜனதாவில் இருந்து விலகியது ஆகியவை காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடக சட்டசபைத் தேர்தலிலும் குஜராத் மாடலில் பாஜக வில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆயினும் இந்த குஜராத் மாடலில் புதிய வேட்பாளர்கள் நிறுத்தியது பாஜக வில் எடுபடாமல் தோல்வி அடைந்திருக்கிறது. தற்போதைய கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்களில் 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்து வெறும் 19 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்களில் 35 பேர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.