சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.3) அஞ்சலி செலுத்துகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் பிப்ரவரி 3-ம் தேதி (நாளை) அனுசரிக்கப்படுகிறது. தற்போது நகர்ப்புற தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதாலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் கூட கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே கோவில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் முன்னணியினர் பிப்ரவரி 3-ம் தேதி காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இது கொரோனா காலம் என்பதால் பெருங்கூட்டமாக கூட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.