புதுக்கோட்டை:

நெடுந்தீவு காரை நகர் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. சமீபத்தில் 87 தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசு, அவர்கள் தமிழகம் வந்து சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்து தனது அட்டூழியத்தை தொடர்ந்துள்ளது.

நெடுந்தீவு காரை நகர் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேரை, 7 படகுகளுடன் சிறைப்பிடித்த இலங்கை கடற்படை, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது. மேலும் 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதப்பட்டினம் மற்றும் கோட்டைபட்டணம் பகுதியில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர்.  ஒரு விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதனால் படகில் உள்ள 2 மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகியுள்ளனர்.

மாயமான மீனவர்களை சக மீனவர்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை 11 விசைப்படகையும், 53 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களில் 20க்கும் மேற்பட்ட மீனவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்வதும், பின்னர் மோடி வேண்டுகோளுங்கு இணங்க விடுதலை செய்வதாகவும்  கூறி தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது..

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் காரணமாக தமிழக மீனவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 6 படகுகளுடன் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து  விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. எஞ்சிய மீனவர்களிடம் இலங்கை கடற்படை நடுக்கடலில் விசாரணை செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 26ந்தேதிதான் இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 87 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தமிழகம் வந்து சேர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் 32 மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் மத்தியஅரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க விடுதலை செய்வதாக இலங்கை அறிவிப்பது தொடர்கதையாகி வருகிறது.

இது, பாரதியஜனதாவின் ‘மோடி வித்தை’யாக இருக்குமோ என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.