தமிழக கொரோனா வரலாற்றில் புதிய சாதனை: இன்று ஒரு நாளில் 52,993 பேருக்கு சோதனை

Must read

சென்னை: தமிழகத்தில் புதிய சாதனையாக இன்று மட்டும் 52,993 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  85,859 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 69,382 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தில் புதிய சாதனையாக இன்று மட்டும் 52,993 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1932492 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது பற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:  ஜூலை 9ம் தேதி தமிழகத்தில் 42,369 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மற்ற நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் விவரம் வருமாறு:
ஜூலை 10 – 37,309
ஜூலை 11 – 37,825
ஜூலை 12 – 42,531
ஜூலை 13 – 44,560
ஜூலை 14 – 41,357
ஜூலை 15 – 41,382
ஜூலை 16 – 45,888
ஜூலை 17 – 48,669
ஜூலை 18 – 48,195
ஜூலை 19 – 52,993
 

More articles

Latest article