பீஜிங்

சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது.  அப்போது தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரயில் வந்து அந்த ரயில் நின்று கொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது.  பின்னால் வந்த ரயிலில் பிரேக் பிடித்தும் தண்டவாளத்தில் பனி படிந்திருந்ததால் ரயில் சறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த ரெயில் மீது மோதியது.

விபத்தில் 2 ரயிலிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.