டில்லி

ப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அதில் 168 பேர் டில்லி வந்துள்ளனர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அமெரிக்கா, இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட நாட்டு அரசுகள் அங்குள்ள தங்கள் நாட்டினரை மீட்டு திருப்பி அழைத்து வர முயல்கின்றனர்.   கடந்த 15 ஆம் தேதி முதல் 500க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படையினர் மீட்டு இந்தியா அழைத்து வந்துள்ளனர்.

நேற்றிரவு இந்திய விமானப்படை விமானம் மூலம் 87 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் இருவர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  மேலும் இன்று 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பேர் விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.   இவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜகிஸ்தானில் இருந்து வந்துள்ளனர்.

இந்த 168 பேரில் 107 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இவர்களை அழைத்து வர தஜகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதராக அதிகாரிகள் உதவி உள்ளனர்.  ஏற்கனவே நேற்று தாலிபான்கள் 150 இந்தியர்களை சிறைபிடித்துள்ளதாக தக்வலகல் வெளியாகின.  ஆனால் தாலிபான்கள் இந்தியர்கள் யாரையும் தாங்கள் சிறைபிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.