🌹சமயபுரம்_மாரியம்மன்🌹 திருக்கோயில் 50 அறிய தகவல் – முதல் பகுதி
சமயபுரம் மாரியம்மன் கோவில் குறித்த ௫௦ தகவல்களில் இன்று முதல் பகுதியாக ௧௫ தகவல்களை காண்போம்
- மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.
- அன்னைஇடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள்.பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயை குறிக்கிறது.
- எட்டுத்திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜோலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.
- நட்சத்திரங்கள்27 ஆதிக்கங்களை தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாகத் திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தால்.
- வசுதேவர்தேவகி தம்பதியின் 8வது குழந்தையான கிருஷ்ணர், நந்தகோபன் யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்படுகின்றனர்.
- அந்தப்பெண் குழந்தை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து “உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!” என்று கூறி மறைந்தது.
- அந்தகுழந்தை தான் சமயபுரம் மாரியம்மன் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.
- விஜயநகரமன்னர், படைகளோடு சமயபுரத்தில் முகாமிட்டார். போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார்.
- அதன்படிபோரில் மன்னர் வெற்றி பெற்றார், அம்மனுக்குக் கோயில் கட்டி கொடுத்தார். நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
- உரியகாலத்தில் கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், சமயபுரத்தாள்’ ன்பது அம்மனது அடைமொழி, “சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்” என்ற முதுமொழி.
- தற்போதையஆலயம் கி.பி. 1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.
- பக்தர்களதுமுயற்சியால் 1984 ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.
- ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தைத் தணிக்கக் காஞ்சி பெரியவரின் ஆலோசனை வேண்டினர்.
- காஞ்சிபெரியவரின் ஆலோசனைப்படி ஆலய வலப்புறத்தில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்தனர்.
- இந்த பிரதிஷ்டை வாயிலாக அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர்.
நாளை அடுத்த தகவல்களை காண்போம்