சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – முதல் பகுதி

Must read

🌹சமயபுரம்_மாரியம்மன்🌹 திருக்கோயில் 50 அறிய தகவல் – முதல் பகுதி

சமயபுரம் மாரியம்மன் கோவில் குறித்த ௫௦ தகவல்களில் இன்று முதல் பகுதியாக ௧௫ தகவல்களை காண்போம்

 1. மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.
 2. அன்னைஇடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள்.பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை  காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயை குறிக்கிறது.
 1. எட்டுத்திருக்கரங்களில் முறையே  கத்தி, கபாலம், சூலம், மணிமாலை,  வில், அம்பு, உடுக்கை, பாசம்  ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.  ஜோலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

 1. நட்சத்திரங்கள்27 ஆதிக்கங்களை  தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாகத் திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தால்.
 2. வசுதேவர்தேவகி தம்பதியின் 8வது குழந்தையான கிருஷ்ணர், நந்தகோபன் யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்படுகின்றனர்.

 1. அந்தப்பெண் குழந்தை சிறைக்கு  வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில்  உயர்ந்து “உன்னைக் கொல்லும்  எமன் கோகுலத்தில் வளர்கிறான்!” என்று கூறி மறைந்தது.

 1. அந்தகுழந்தை தான் சமயபுரம்  மாரியம்மன் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

 1. விஜயநகரமன்னர், படைகளோடு சமயபுரத்தில் முகாமிட்டார். போரில்  வெற்றி பெற்றால், அம்மனுக்குக்  கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார்.

 1. அதன்படிபோரில் மன்னர் வெற்றி பெற்றார், அம்மனுக்குக் கோயில் கட்டி கொடுத்தார். நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

 1. உரியகாலத்தில் கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், சமயபுரத்தாள்’ ன்பது அம்மனது அடைமொழி, “சமயத்தில் காப்பாள்  சமயபுரத்தாள்” என்ற முதுமொழி.

 1. தற்போதையஆலயம் கி.பி. 1804ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

 1. பக்தர்களதுமுயற்சியால் 1984  ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி  நிர்வாகத்துக்கு மாறியது.

 1. ஒரே சந்நிதியில் மூன்று  விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தைத் தணிக்கக் காஞ்சி பெரியவரின் ஆலோசனை வேண்டினர்.

 1. காஞ்சிபெரியவரின் ஆலோசனைப்படி ஆலய வலப்புறத்தில் ஞான சக்தி,  இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம்  கொண்ட மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்தனர்.

 1. இந்த பிரதிஷ்டை வாயிலாக அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

நாளை அடுத்த தகவல்களை காண்போம்

More articles

Latest article