தமிழகத்தின் மின்சார தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்களில் காற்றாலை, சூரிய சக்தி மற்றும் நீர் மின்சாரம் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரம் கிடைத்திருப்பதாக புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றாலை மூலம் கடந்த 6 ம் தேதி 119.25 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தியானதாகவும் 7 ம் தேதி 109.65 மற்றும் 8 ம் தேதி 115.86 மில்லியன் யூனிட்டுகளாகவும் இருந்தது.
சூரிய சக்தி மூலம் 6 ம் தேதி 17.7, 7-ம் தேதி 23.3 மற்றும் 8 ம் தேதி 20.3 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தியானது.
நீர்மின் நிலையங்களில் இருந்து 6 ம் தேதி 21.5, 7 ம் தேதி 23.02 மற்றும் 8 ம் தேதி 25.53 மில்லியன் யூனிட்டுகள் பெறப்பட்டது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது, அதேவேளையில் கடம்பாறையில் உள்ள நீர்மின் நிலையம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த மின்சார பயன்பாடு 286.94 மில்லியன் யூனிட்டுகளும், ஞாயிறன்று 269.31 ஆகவும், திங்களன்று 302.79 மில்லியன் யூனிட்டுகளாகவும் இருந்தது.
அடுத்த சில மாதங்களுக்கு தமிழகம் நோக்கி காற்று வீசக்கூடும் என்பதால் காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கணிசமான அளவு மின்சாரம் உற்பத்தி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.