சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஒருவாரம் போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆலோசனையில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் பேசிய முதல்வர், எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளிகளில்  போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்கு காட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில்,  தமிழகத்தில் ஆகஸ்டு 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வரமாக கடைபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில் , அணைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.