சென்னை: நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், அதில் உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கடந்த 3 நாளில் சுமார் 50 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக நடிகர் விஜய் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறி வந்த நடிகர் விஜய், கடந்த ஆண்டு இறுதியில் புதிய கட்சிக்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில்,  கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொர்பான செயலியை அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய்.  உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய், கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்தார்.  தான் முதலாவதாக கட்சியில் இணைந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.