திருப்பூர்:
திருப்பூரில் வட மாநிலத்தவருக்கு சொந்தமான கடையில், சுமார் 50 கிலோ அளவிலான போதை சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருப்பூர் பல்லடம் அருகே சின்னகரை என்ற பகுதியில் உள்ள வடமாநிலத்த வருக்கு சொந்த கடையில், குவியல் குவியலாக போதைச் சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான ரகசிய தகவலின் பேரில், இன்று திடீரென அந்த கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 50 கிலோ மதிப்புள்ள போதை சாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையின் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel