சென்னை:
ன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவர்கள் மீது மே 29 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.

வன்கொடுமை சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி இன்று காலையில் திடீரென கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுபோன்ற வழக்கில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ள திமுக எம்.பி.க்கள்  டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசல வழக்கு தாக்கல் செய்யதனர்.
இந்த அவசர வழக்கு நீதிபதி நிர்மல்குமார்  இன்று மாலை விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து,   டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான நடவடிக்கைளும் எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 29 ஆம் தேதி ஒத்திவைத்து.