சென்னை:
விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்தாவ சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னையில் அதிகரித் துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப் பட்டது. தற்போது பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புதிய கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சாதாரண ரயில் கட்டணத்தைவிட மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என்பதால், அதை உபயோகிக்கும் பயணிகள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில் விடுமுறை நாட்களிலும், மெட்ரோ ரயிலை சேவையை பயணிகள் அதிகளவில் விரும்புவது இல்லை.
இந்த நிலையில், விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பல்பேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது அரசு விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்ததில் 50 சதவிகிதம் சலுகையை அறிவித்து உள்ளது.
அதன்படி, வரும் ஞாயிறு (27-10-19) முதல் எல்லா ஞாயிற்று கிழமைகளில் 50 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களிலும் இந்த 50 சதவிகித கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு முதல் இந்த சலுகை அமலுக்கு வர உள்ளது.
இந்த சலுகை டிரிப் பாஸ் உள்ளவர்கள் மற்றும் பயண சலுகை அட்டை கொண்டவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.