டில்லி,

த்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது.

அதையடுத்து தேர்தல் தேதியை  இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கமிஷனர் நஜிம் ஜைதி அறிவித்தார்.

5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாக்குச்சாவடிகள் விவரம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

 

தேர்தல் தேதி அறிவித்து, அதுகுறித்து தேர்தல் ஆணையர் கூறியதாவது,

நடைபெற இருக்கும்  5 மாநில சட்டமன்ற  தேர்தலில் 16 கோடி பேர் வாக்களிக்க இருப்பதாகவும்,  1,85,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

இது கடந்த 2012ம் ஆண்டை விட 15 சவிகிதம் அதிகம் என்று கூறினார்.

 இறுதி  வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் விவரம்:

கோவா – ஜனவரி 5ந்தேதி

மணிப்பூர் – ஜனவரி 12

பஞ்சாப் – ஜனவரி 5

உத்தரகான்ட் – ஜனவரி 10

உத்தரபிரதேசம் – ஜனவரி 10

690 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் 133 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கான ரிசர்வ் தொகுதிகளாகும்.

வாக்குச்சாவடிகளில் ஊனமுற்றவர்களும் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும் என்றும்,

விவிபிஏடி (VVPAT-voter verified paper audit trail) எனப்படும் வாக்களித்ததற்கான அடையாள சீட்டு வழங்கும் புதிய இயந்திரங்கள் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது.

முதன்முறையாக இந்த 5 மாநில தேர்தலில் படை வீரர்கள் குறிப்பிட்ட இடங்களில் இருந்து ஆன்லைமூலம் வோட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் போட்டோவுடன், இந்தியர் என்பதற்கான அத்தாட்சி சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும்.

ராணுவ வீரர்கள் மின்னணு முறையில் ஓட்டு பதிவு செய்ய வசதி செய்து தரப்படும்.

சட்டசபை வேட்பாளர்கள் செலவுவிவரம்

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் மாநில வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் மட்டுமே தொகுதிக்காக செலவு செய்ய முடியும்.

மணிப்பூர்  மற்றும் கோவா வேட்பாளர்கள் தொகுதிக்கு 20 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும்.

டிவிக்களில் செய்யப்படும் விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டு, அதற்கான வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும்

அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.