டெல்லி:  5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து  காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத நிலையில், இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வருகிறார். இதற்கிடையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது முதல், மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்களில் சிலர், கட்சிக்கு புதிய தலைவரை தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுக்கும்படி  வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சிலர் காந்தி குடும்பத்தினரே தலைவராக இருக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி  தொடர் தோல்விகளை சந்தித்து வருவது குறித்த, அதிருப்தியடைந்த மூத்த தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்ச்ர கபில்சிபல் உள்பட பல முன்னாள் அமைச்ச்ரகள்,  5 மாநில முன்­னாள் முதல்­வர்­கள்,  எம்­பிக்­கள் உள்பட 23 பேர்  இணைந்து, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். அதில்,  கட்சி யைப் பலப்­ப­டுத்த அனைத்து அமைப்­பு­க­ளுக்­கும் தேர்­தல் நடத்­த­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தினர். இதைத்தொடர்ந்து கட்சியின் உள்அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துளள  5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால், மூத்த தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை மாற்றுவது குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக  மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர், காங்கிரஸ் கட்சியில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. இப்போதாவது மக்கள் நம்பிக்கையைப் பெறக் கூடிய செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என டிவிட் போட்டுள்ளார்.
இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படத்தி உள்ளது, 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து செயற்குழுவில் விவாதிக்க வேண்டும் என்கிற குரல்களும் எழுந்துள்ளன.
 இந்த நிலையில்தான் மூத்த அதிருப்தியாளர்கள் 23 பேர் இன்று மீண்டும் கூடி விவாதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய கபில்சிபல், ‘காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். எனவே அதற்கு புத்துணர்ச்சி அளித்து, அதன் மகிமையை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. அதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவதற்காக கடந்த காலத்தை போல உழைக்கப்போகிறோம்’ என்று கூறினார்.

குலாம்நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அவரது அனுபவத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தாது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.
 கட்சி மற்றும் நாட்டை பலப்படுத்துவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக மேடையில் உறுதி எடுத்துக்கொண்ட இந்த தலைவர்கள், பா.ஜனதா கட்சி நாட்டின் வளங்களை தனது கட்சியை பலப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் குலாம்நபி ஆசாத், மணிஷ் திவாரி, பூபிந்தர் சிங் ஹூடா, ராஜ் பப்பர், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.