டில்லி,
உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
இந்திய தலைமை தேர்தல் டில்லி இன்று அதற்கான அதிகாரப்பூர்வ தலைமை தேர்தல் கமிஷனர் நஜிம் ஜைதி வெளியிட்டார்.
உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது.
அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி விவரம்
கோவா – பிப்ரவரி 4ந்தேதி
பஞ்சாப் – பிப்ரவரி 4 ந்தேதி
உத்தரகாண்ட் – பிப்ரவரி 15ந்தேதி
மணிப்பூர் மாநில தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
முதல்கட்டம் : மார்ச் 4 ந்தேதி
இரண்டாவது கட்டம் : மார்ச் 8ந்தேதி
உ.பி. தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
முதல் கட்டம் – பிப்ரவரி – 11ந்தேதி
2வது கட்டம் – பிப்ரவரி – 15 ந்தேதி
3வது கட்டம் – பிப்ரவரி 19ந்தேதி
4வது கட்டம் – பிப்ரவரி 23ந்தேதி
5வது கட்டம் – பிப்ரவரி 27ந்தேதி
6 வது கட்டம் – மார்ச் 4 – ந்தேதி
7வது கட்டம் – மார்ச் 8ந்தேதி
அனைத்து மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: மார்ச் – 11ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.