சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1

மேற்கு இந்தியத் தீவுகள்

சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே.   அதே வேளையில் அவர்கள் வேறு நாடுகளுக்கு விளையாடியும் புகழ் பெற்றுள்ளனர் என்பதும் நாம் நன்கு அறிந்த ஒன்றாகும்.   இந்திய வம்சாவளியினரான இஷ் சோதி, ரவி, பொபாரா ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம் ஆவார்கள்.  இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளி 5 கிரிக்கெட் வீரர்களில் இர்வரைப் பற்றி இந்த பகுதியில் காண்போம்.

தேவேந்திர பிஷூ

கயானா தீவுகளில் சிறிய அளவில் இருந்தாலும் இன்னமும் இந்து மதம் பின்பற்றப்படுகிறது.   இங்கு இந்து மதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தேவேந்திர பிஷூ.    இவருடைய குடும்பம் பிரிட்டிஷ் காலத்தில் கயானா தீவுக்குக் குடிபெயர்ந்த இவருடைய குடும்பத்தின் மூதாதையர்கள் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இவருக்குச் சரியாகத் தெரியவில்லை.

இவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணந்திருந்தாலும் இந்தியாவில் உள்ள இந்து மத தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவதை மிகவும் விரும்புபவர் ஆவார்.  இவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக 85 போட்டிகளில் பங்கேற்று 150க்கும் அதிகமான விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.  கரீபியன் பிரிமியர் லீக் அணியின் மூத்த வீரரான இவர் போட்டிகளில் 6.29 ரன்கள் என்னும் விகிதத்தை எட்டி உள்ளார்.

தனேஷ் ராம்தின்

இந்தோ – கயானிஸ் இனத்தைச் சேர்ந்த தனேஷ் ராம்தின் மற்றொரு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ஆவார்.  இவருடைய மூதாதையர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் காணப்படும் போஜ்புரி மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  மேற்கு இந்திய அணியில் இவர் 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.   இவர் பேட்டிங்கை விட விக்கட் கீப்பராக நன்கு விளையாடி உள்ளார்.

சந்திரபால் ஓய்வுக்குப் பிறகு இவர் அணித் தலைவராகவும் இருந்துள்ளார். அது மட்டுமின்றி இவர் 139 ஒரு நாள் போட்டிகளிலும் 71 டி20 போட்டிகளிலும் தனது நாட்டுக்காக விளையாடியவர் ஆவார்.   தற்போது இவர் கரிபியன் பிரிமியர் லீக்கில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நாவிஸ் பாட்டியல் ஆகிய அணிகளில் இடம் பெற்றுள்ளார்.

விரைவில் அடுத்த பகுதி தொடரும்…