டில்லி:

மத்திய பட்ஜெட்டில் வரி இனங்களில் பல்வேறு மாற்றங்களை நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இவை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோருக்கு பல வழியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. சம்பள பிரிவு முதல் பங்கு முதலீடு செய்வோர் வரை இந்த மாற்றத்தை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் 5 மாற்றங்கள்…..

# போக்குவரத்து படி ரூ.19,500 மற்றும் மருத்துவ செலவு திரும்ப பெறுதல் மூலம் ரூ.15,000 வரை என மொத்தம் ரூ.40 ஆயிரம் வரை விலக்கு பெறலாம். இதன் மூலம் சம்பளம் பெறும் பிரிவினர் 2.5 கோடி பேர் பயன்பெறுவார்கள்.

# பங்கு முதலீடுகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரியை அரசு அறிமுகம் செய்துள்ளது. பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் ரூ. 1 லட்சத்தை தாண்டும்போது 10 சதவீத வரி செலுத்த வேண்டும். இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 31ம் தேதி வரை இதற்கு சட்ட விலக்குகள் அளிக்கப்பட்டது.

# பங்கு பரஸ்பர நிதி மூலம் கிடைக்கும் ஈவுத்தொகை விநியோகத்துக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.

# தனி நபர் வருமான வரி செலுத்தும் போது வசூல் செய்யப்படும் 3 சதவீத செஸ் இனி 4 சதவீதமாக உயர்த்தி வசூலிக்கப்படும்.

# தேசிய பென்சன் திட்டத்தில் தொழிலாளர் பங்களிப்பு இல்லாத கணக்கில் இருந்து பணம் எடுக்க வரி கிடையாது. தற்போது இந்த சலுகை தொழிலாளர் பங்களிப்பு இல்லாத கணக்குகளுக்கு இல்லை. இந்த நிதியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.