ம்போடியாவில் அங்கோர் தமிழ்ச்சங்கம் சார்பில் 5 நாட்கள் உலக நாட்டிய விழா எழுச்சியுடன்  நடைபெற்று வருகிறது.  கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் துணையோடு, கம்போடிய அரசின் பங்களிப்போடு விழா  நடைபெறுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றார்போல அங்கும் இன்னும் தமிழும், தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே அந்தநாட்டு அரசு, கம்போடிய நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிப்பெயர்த்து, கம்போடிய பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்த்து தமிழுக்கு மகுடம் சூட்டியுள்ளது.

இநத நிலையில், கம்போடியாவின் அங்கோர் தமிழ்ச் சங்கம், மற்றும் கம்போடிய கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் துணையோடு, கம்போடிய அரசின் பங்களிப்போடு   உலக நாட்டிய விழா (Global Naatya Festival)  கடந்த 24ந்தேதி தொடங்கிய நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் விழாவானது, கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலில் உள்ள யானை சதுக்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டியம், நடனம், ஆடல், பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து வருகின்றனர்.