பீஜிங்: இன்று அதிகாலை சீனாவின் பல பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 5.07 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கல் இந்தியா சீன எல்லை உள்பட காஷ்மீரின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சீனா மற்றும் கிர்கிஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 5.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கமானது, சீனாவின் தலைநகர் பீஜிங், சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற நகரில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் உருவானதாகவும்,  நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்து என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று, கிர்கிஸ்தான் நாட்டின் பீஷ்கேக் நகரில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 726 கி.மீ. தொலைவில் அதிகாலை 5.19 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுடதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கமானது,  தெற்கு ஜின்ஜியாங், சீனா  எல்லை, கஜகஸ்தான் ஜின்ஜியாங் எல்லை, காஷ்மீர் ஜின்ஜியாங் எல்லை, வடக்கு ஜின்ஜியாங், சீனா, சின்ஜியாங் கிங்காய் எல்லை, சீனா, வடமேற்கு காஷ்மீர், காஷ்மீர் ஜிசாங் எல்லை, கிழக்கு கஜகஸ்தான், கிழக்கு காஷ்மீர், மேற்கு ஜிசாங், காஷ்மீர் இந்திய எல்லை பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதாக என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.