சென்னை: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணியின் வெற்றி விழா இன்று மாலை  முதலமைச்சர் தலைமையில் நடைபெறு கிறது.

ஐபிஎல் சூதாட்டம் காரணமாக 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்த சிஎஸ்கே அணி, மீண்டும் களத்தில் இறங்கி அபாரமாக ஆடி வருகிறது. ஏற்கனவே 3 முறை ஐபிஎல் கோப்பைகளை தட்டி வந்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் அபராமாக ஆடி கோப்பையை வென்றது.

இதையடுத்து, ஐபிஎல் அணியின் வெற்றிவிழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என இந்தியா சிமெண்ட் மற்றும் சிஎஸ்கே அணியின்   உரிமையாளர் சீனிவாசன்  தெரிவித்தார். அப்போது, உலக கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார். அந்த விழா சென்னையில் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சிஎஸ்கே வெற்றிவழி நவம்பர் 20ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா இன்று மாலை 5 மணிக்கு  சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சிஎஸ்கே அணி கேப்டன் தோனி உள்பட பல வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.