ஐதராபாத்

பிரபல இந்திய வீரரான சேவாக்கின் சாதனையை முறியடித்து  சாதனை படைத்துள்ளார் விரோட் கோலி. இந்தியாவின் இளம் வீரரான விரோட் கோலி தனது அதிரடி ஆட்டத்தின் காரணமாக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்றும் வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விரோட் கோலி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்.

நேற்று ஆரம்பமான இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.

கேப்டன் விராட்கோலி 141 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 111 ரன்னும், ரஹானே 60 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 45 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.  கோலியின் ருத்ர தாண்டவம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. அவருடன் ஆடிய   ரஹானே 82 ரன்களில் ஆட்டமிழந்த போதும், விராட் கோலி தனது  தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

சற்று முன் தனது இரட்டை சதத்தை நிறைவு செய்து இந்திய ரசிகர்களின் மீண்டும் சிம்மாசனமாய் அமர்ந்தார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 204 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 127.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து உள்ளது. சகா 11 ரன்களிலும் அஷ்வின் ரன் எதுவும் இன்றியும் விளையாடி வருகின்றனர்.

தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.  இது அவரது 4வது இரட்டை சதம்.

ஏற்கனவே இந்திய வீரர்  சச்சின் டெண்டுல்கர் இதுபோல் அதிரடியான ஆட்டங்கள் ஆடி வந்தார். அவர் பேட்டை பிடித்தாலே எதிரணி பவுலர்கள் பந்தை எப்படி வீசுவது என்று குழம்பிவிடுவார்கள். அவரது ஆட்டம்.  பந்து எந்த பக்கம் வந்தாலும், அதை அனாயசமாக அடித்து விளாசுவார்.

அதையடுத்து தற்போது விராட் கோலியின் ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற  டி20 போட்டிகளில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம்  நூறு ரன்களுக்கு மேல் குவித்து வந்தார். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கலக்கத் தொடங்கியிருக்கிறார்.

தற்போது மற்றொரு பெருமைக்கும் தகுதியாகி உள்ளார் கோலி.

 

உள்ளூர் சீஸனில் அதிக  ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையும் இப்போது கோலிக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக கவாஸ்கர்  1978/79 சீஸனில் 1027 ரன்கள் அடித்திருந்தார், சேவாக் 2004/05 சீசனில் 1105  ரன்கள் குவித்து கவாஸ்கர் சாதனையை முறியடித்திருந்தார்.

தற்போது கோலி, சேவாக்கின் சாதனையையும் முறியடித்து தனது புதிய சாதனையை நோக்கி தொடர்ந்துகொண்டிருக்கிறார் .

கடந்த 15 இன்னிங்ஸ்களில் நடைபெற்ற போட்டிகளில்,  9,18,9, 45, 211, 17, 40 , 49*, 167, 81, 62, 6*, 235, 15, 204 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் நான்கு முறை 150  ரன்களுக்கும் மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களில் விரோட் கோலி ஒரு ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை.