சென்னை,

ரும் 13ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 18 அணிகள் பங்கேற்கிறது.

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடபெற இருக்கிறது.

இந்த போட்டியில், ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, மத்திய கலால் வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஏ.ஜி.அலுவலகம், லயோலா, ஸ்டேட் வங்கி, வெஸ்லி கிளப், குன்னூர் லெவன் உள்பட 18 அணிகள் கலந்து கொள்கின்றன.

‘நாக்-அவுட்’ முறையில் இந்த போட்டி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இது தவிர 5 சிறந்த வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.70 லட்சமாகும்.